தேநீர்
காலையிலும் நீ; மாலையிலும் நீ,
கற்கையிலும் நீ; கருத்துரைக்கையிலும் நீ,
சிந்திக்கையிலும் நீ; குளிரில் சிலிர்க்கையிலும் நீ,
மனச்சீற்றம் கலைக்கும் 'டீ'யாக,
ஓயாமல் ஓய்கையில் சாயாவாக,
தேனிசையோடு நீராட தேநீராக,
பல தியானங்களைத் தானமாகத் தந்த பானமே,
'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர்,
தேநீரின்றி அமையாது உலகு என்கிறது வாழ்க்கை.
© அபிநயா மனோகர்
Comments
Post a Comment