பகலும் இரவும்
ஒருமுறை ஒரு பெண்ணின் கனவில்:
பகலுக்கும் இரவுக்கும் சண்டை வந்தது
யார் பெரியவனென்று...
பகல் சொன்னது;
ஒளி செறிந்து, உத்வேகம் ஊட்டி, புதுப்பிக்கப்பட்ட ஆரம்பங்கழுடன், பசுமையான கனவுகளை உருவாக்கி, பயணமெனும் பல்லக்கிலேறி பவனிவருபவன் நானென்று...
அதற்கு இரவு...
நிழல் விரித்து, நிசப்தம் எய்தி,
கனவுகளை இளைப்பாற்றி, நினைவுகளைக் கோர்வையாக்கி,
கடமைகளால் புதைக்கப்பட்ட காதலை இசைத்து, பாய்மரத் தென்றலில் மிதப்பவன் நானென்றது...
அலைபேசியின் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவள்,
நேரம் மாலை ஆறு ஆக இரவுப்பணிக்காக தயாராக சென்றுவிட்டாள்.
அலைகடிகாரம் விடாமல் அலறிக்கொண்டிருந்தது...
அபிநயா மனோகர்
Comments
Post a Comment