மனமும் மூளையும்
ஜன்னலோர பயணங்களில்
ஆழ்ந்து கொண்டிருக்கும்போது,
இதமாய் தீண்டும் தென்றலினூடே
ரணமாய் நெருடும் நினைவுகள்
புருவங்களை சுழித்துக் கொண்டிருக்க,
ஏன் எதுவும் செய்யவில்லை
எனக் கேட்கும் மனதிற்கு,
மனதின் ரணங்களுக்கெல்லாம் போரிட்டால்,
இதயங்களின் பிணங்களினூடேதான்
பயணம் செய்யவேண்டியிருக்கும்
என்றது மூளை,
போர்தான் வீரம் என்றது மனம்,
போர்வாளால் வீரம் இயற்றும் காலமல்ல இது,
உள்ளும் புறமும் முட்களாய் வீசும்
இதயங்களை தொடாமல் கடந்து செல்லும் மனவடக்கமே வீரம் என்றது மூளை...
செல்ல செல்ல முட்களெய்தால்
என்றது மனம்...
பஞ்சாய் பதியாமல் கல்லாயிரு,
வீசிய முட்களால் விளைச்சல் பெறுவது நீயல்லவே என்றது மூளை,
அமைதிப் பெருமூச்சில் அண்ணார்ந்து பார்த்தது மனம்...
அபிநயா மனோகர்
Comments
Post a Comment